அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’... அழகான காதல் கதை.. டிரெய்லர் வெளியீடு !

அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வாரம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் அசோக் செல்வன் நடிப்பில் ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை வியகாம் 18 ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்து வருகிறார்.
இந்த படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அழகான காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, பிரபல தெலுங்கு நடிகை ஷிவாத்மிகா, ஷிவதா என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இந்த நான்கு பெண்களுடன் பயணம் செய்யும் ஒரு ஹீரோவின் கதை தான் இந்த படம். வித்தியாசமான காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.