அதர்வா நடிப்பில் உருவாகி வரும் புதிய வெப் சீரிஸ்!
வெப் சீரிஸ் கலாச்சாரம் தமிழில் விரைவாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே முன்னணி நடிகர்கள் சிலர் வெப் சீரிஸில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரிஸ் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் காலங்களில் தமிழிலும் அருமையான வெப் சீரிஸ்கள் பல உருவாகும் என்று நம்பலாம்.

இந்நிலையில் நடிகர் அதர்வா வெப் சீரிஸில் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சீரிஸை பிரசாத் முருகேசன் இயக்குகிறார். திரில்லர் ஜேர்னரில் இந்த சீரிஸ் உருவாக உள்ளது. மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த சீரிஸ் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அதர்வா சாம் ஆண்டன் மற்றும் சற்குணம் இயக்கத்தில் இரு படங்களில் நடித்துள்ளார்.

