நடிகை அபர்ணா பாலமுரளியிடம் தவறாக நடக்க முயற்சி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

AparnaBalamurali

நடிகை அபர்ணா பாலமுரளியிடம் கல்லூரி மாணவன் ஒருவன் தவறாக முயற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை அபர்ணா பாலமுரளி. மலையாள நடிகையான அவர், தமிழில் ‘எட்டுத் தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ படத்தில் நடித்து பிரபலமான நடிகையாக மாறினார். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. 

AparnaBalamurali

தற்போது மலையாளத்தில் ‘தங்கம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். சஹீத் அராபாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி 26-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அபர்ணா கலந்துக்கொண்டார். 

AparnaBalamurali

அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த அபர்ணாவிடம் புகைப்படம் எடுக்க கல்லூரி மாணவர் ஒருவர் வந்தார். அந்த நேரத்தில் எதிர்பார்க்காத விதமாக அந்த மாணவர் அபர்ணா தோள் மீது கையை போட்டார். அதை விரும்பாத அபர்ணா, மாணவரிடம் விலகி மீண்டும் தனது இருக்கையில் அமர்ந்தார். அபர்ணாவிடம் மாணவர் தவறாக நடந்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 


 

Share this story