அவதார் திரைப்படம் மொத்தம் எத்தனை பாகங்கள்? - அவதார் பட இயக்குநர் தகவல்

james cameron

அவதார் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். 

உலக சினிமா வரலாற்றில் அனைத்து ரசிகர்களின் மனதை வென்ற திரைப்படம் அவதார். கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். வழக்கமான சினிமா படங்கள் போன்று இல்லாமல் நம்மை வேறு உலகிற்கு எடுத்து சென்ற இந்த படம் இன்றைக்கும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது. மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாம் உருவாகி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வந்தது. முதல் பாகத்தை போன்று அவதாரின் வேறு உலகத்தை இந்த படத்தில் காணலாம் என்று தகவல்கள் கசிந்தன.  கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கடலுக்கடியில் சாம்ராஜ்யம் நடத்தும் அவதாரின் அழகான வாழ்க்கையை அழகாக காட்டப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கிராபிக்ஸில் மட்டுமே உருவாகியுள்ள இந்த படத்தி டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Avatar way of water

இதனை தொடர்ந்து 'அவதார்' திரைப்படம் 5 பாகங்களாக வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தினை மூன்று பாகங்களோடு முடித்து கொள்ளும் எண்ணம் உள்ளது என்றும் ஆனால், அது பாக்ஸ் ஆபீஸ் வசூல் செயல்பாட்டை பொறுத்தே இருக்கும் என்றும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story