சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது.. தெலுங்கில் தட்டித்தூக்கிய பிரதீப் ரங்கநாதன் !
தெலுங்கில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெற்றுள்ளார்.
ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். 90ஸ் கிட்ஸ்களின் கதைக்களம் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி முதல்முறையாக ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘லல் டுடே’.
இந்த படத்தில் இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2k கிட்ஸ்களின் சமகால வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் வெறும் 4 கோடியில் எடுக்கப்பட்டு 100 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெற்றுள்ளார். இந்த விருதினை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது கையால் பிரதீப்பிற்கு கொடுத்தார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.