பிறந்தநாளில் ‘அயலான்’ போஸ்டர்.. சிவகார்த்திகேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு !

ayalaan movie

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி ‘அயலான்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

‘இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி வரும் இப்படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வருகிறார். குழந்தைகளுக்கான படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

ayalaan movie

இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. ‘டான்’ படத்திற்கு முன்னரே தொடங்கப்பட்ட இப்படம் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் இன்னும் ரிலீசாகவில்லை. அதனால் இந்த படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

ayalaan movie

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி இன்று இப்படத்தின் அப்டேட் ஏதேனும் வெளியாகுமா என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Share this story