ஹாரர் த்ரில்லரில் மிரட்டும் ‘மிரள்’... பரத் பட டிரெய்லர் வெளியீடு !

பரத் மற்றும் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள ‘மிரள்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிரள்’. அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.
இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், காவ்யா அறிவுமணி, மீரா கிருஷ்ணன், ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தை பிரசாத் இசையமைத்துள்ளார். நெல் வயல், காற்றாலை பின்னணியில் உள்ள கிராமம், மலை ஆகியவை இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த கிராமம் திரும்பும் பரத் மற்றும் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் திகில் அனுபவங்கள் தான் இப்படத்தின் கதை. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஹாரர் த்ரில்லரில் மிரட்டும் வகையில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.