நாளை மிரட்ட வருகிறது 'மிரள்'.. பரத் படத்தின் முக்கிய அப்டேட் !

miral

பரத்தின் 'மிரள்' படத்தின் டிரெய்லர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் வாணிபோஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.  வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏற்பட்டுள்ளது. 

miral

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். 

miral

இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், காவ்யா, ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனது. இந்த படத்தின் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், இதில் பாடல்களே இல்லை. படத்தின் முழு கதையும் ஒரு காற்றாலை பண்ணையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி, அம்பாசமுத்திரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story