விறுவிறுப்பாக நடைபெறும் தயாரிப்பு பணிகள்... பிக்பாஸ் தர்ஷனின் ‘நாடு’ முக்கிய அப்டேட்

nadu

பிக்பாஸ் தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாடு’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘எங்கேயும் எப்போதும்’ மூலம் பிரபலமான சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாடு’. இந்த படத்தில் பிக்பாஸ் தர்ஷன் மற்றும் நடிகை மகிமா நம்பியார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

nadu

ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் ஆகிய இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சத்யா இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். உண்மை சம்பவங்களை வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.  

nadu

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக சிங்கம் புலி மற்றும் தர்ஷன் டப்பிங் கொடுத்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Share this story