தரமான சம்பவம் காத்திருக்கிறது... பாபி சிம்ஹாவின் ‘தக்ஸ்’ டிரெய்லர் குறித்த அறிவிப்பு !

thugs

பாபி சிம்ஹாவின் ‘தக்ஸ்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர், தற்போது ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

KumariMavattathinThugs

இந்த படத்தில் வில்லனாக ஆர்.கே.சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் முனிஸ் காந்த் மற்றும் பாலிவுட் நடிகர் ஹிருது ஹாரூன் ஆகியோரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியாஷிபு என்பவர் தயாரித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தின் அடியாட்களுக்கு இடையே நடக்கும் வன்முறை சம்பவங்களை வைத்து இந்தப் படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

thugs

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வரும் 27-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மிரட்டலான போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story