மிரட்டலாக உருவாகியுள்ள பாபி சிம்ஹாவின் ‘வசந்தமுல்லை’.. ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் பாபி சிம்ஹா. அவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘வசந்த முல்லை’. த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தை குறும்பட இயக்குனர் ரமணன் புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.
பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக புதுமுக நாயகி காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். எஸ்.ஆர்.டி.எண்டர்டையின் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழியில் வெளியாகவுள்ளது. த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி மிரட்டலான போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.