மொட்டை தலையுடன் மிரட்டும் பாபி சிம்ஹா... ‘தக்ஸ்’ கேரக்டர் போஸ்டர் வெளியீடு !

thugs

பாபி சிம்ஹா பிறந்தநாளையொட்டி ‘தக்ஸ்’ படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் குறுகிய காலத்தில் பிரபலமான நடிகர்களில் பாபி சிம்ஹாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. வில்லனாக மிரட்டி வந்த பாபி சிம்ஹா, தற்போது ஹீரோவாக புதிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தடை உடை, இராவண கல்யாணம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்த படங்கள் போன்று பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’. ஆக்ஷன் அதிரடியில் உருவாகி வரும் இந்த படத்தை பிருந்தா மாஸ்டர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். வில்லனாக ஆர்.கே.சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் முனிஸ் காந்த் மற்றும் பாலிவுட் நடிகர் ஹிருது ஹாரூன் ஆகியோரும் நடிக்கின்றனர். 

thugs

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியாஷிபு என்பவர் தயாரித்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தின் அடியாட்களுக்கு இடையே நடக்கும் வன்முறை சம்பவங்களை வைத்து இந்தப் படம் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் பாபி சிம்ஹா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி துரை என்ற கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story