இறுதிக்கட்டத்தில் பாபி சிம்ஹாவின் 'தடை உடை'... புதிய அப்டேட்
பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள 'தடை உடை' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் என்.எஸ்.ராகேஷ் இயக்கத்தில் பிரபல நடிகரான பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'தடை உடை'. இந்த படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக மிஷா நராங் நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முத்ராஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. சக்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆதிஃப் இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து இப்படத்திற்கு பாடல்களை எழுதுகிறார். ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதத்திற்கு முன்பு தொடங்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை சமீபத்தில் நடிகை ரோகிணி நிறைவு செய்தார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. விரைவில் நிறைபெறும் இந்த படப்பிடிப்பை அடுத்து புதிய அப்டேட்டுகள் வெளியாகும் என வெளியாகியுள்ளது.

