அஜித்துடன் நடிக்க ஆசை - போனி கபூர் மகன் விருப்பம் !

arjun Kapoor

 நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக போனி கபூரின் மகன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.‌

'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அஜித்தை வைத்து 'துணிவு' படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி தயாரித்துள்ளார். வரும் பொங்கலையொட்டி  இப்படம் நேற்று அதிகாலை உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியானது. நடிகர் ஆக்ஷன் த்ரில்லரில் மிரட்டியுள்ள இப்படம்‌ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

arjun Kapoor

இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன்  அர்ஜூன் கபூர், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் அஜித். நிச்சயம் அவருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுவதாக நடிகர் அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார். 

arjun Kapoor

மேலும் பேசிய அவர், சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படங்கள் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி வருகிறது. இந்தத் திரைப்படங்கள் மாபெரும் வசூலை குவித்து வருகிறது. அதனால் அஜித்துடன் நான் நடித்தால் பிற மொழி ரசிகர்களையும் நான் சென்றடைவேன். அதனால் எதிர்காலத்தில் அஜித் நடிக்கும் திரைப்படங்களில் இணைய முயற்சி செய்வேன் என்று அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார். 

 

Share this story