எங்கள ஆங்கிலத்துல பேச சொல்ல நீ யார்? உன் சிலுமிஷம் ஊருக்கு தெரியாதா? – சித்தார்த்தை டோஸ்ட் செய்த சி.ஆர்.பி.எப் வீரர்.

photo

சமீபத்தில் இணையத்தில் பேசுபொருளான ஒரு செய்தி நடிகர் சித்தார்த், தான் மதுரை விமானநிலையத்தில் இந்தியில் பேச சொல்லி அனுபவித்த  கருத்துதான். பரபரப்பாக பேசப்பட்ட இந்த விஷயத்திற்கு தற்போது ஒரு சிஆர்பிஎப் வீரர் பதிலடி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

photo

அதில் அவர் கூறிதாவது, எல்லோருக்கும் வணக்கம், இந்த பதிவு நடிகர் சித்தார்த் அவர்களுக்கு. நடிகர் சித்தார்த் அவர்களே நீங்கள் மதுரை விமான நிலையத்தில் துணை ராணுவ வீரர்கள், ஹிந்தியில் பேச சொல்லி துன்புறுத்தினார்கள் எனக் கூறி இருக்கிறீர்கள். எங்களை ஆங்கிலத்தில் பேச சொல்ல நீங்கள் யார்? துணை ராணுவ படையை ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்ல நீங்கள் யார் என்று நான் கேட்கிறேன்.நாங்கள் பிரிட்டிஷ்காரர்களா இல்ல வெள்ளைக்காரர்களா? இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழிய பேச சொன்னால் கண்டிப்பாக நாங்கள் பேசுவோம். தமிழில் தான் தெரியும்னு சொன்னா அங்க இருக்க  தமிழ் அதிகாரி உங்க கிட்ட தமிழ்ல  பேசுவாங்க. தெலுங்கு தான் தெரியும்னு சொல்லியிருந்தா ,அங்க இருக்க  தெலுங்கு அதிகாரி உங்க கிட்ட தெலுங்குல பேசி இருப்பாங்க. ஆனால் நீங்கள் ஆங்கிலத்துல பேசுன்னு சொன்னா நாங்க பேச என்ன வெள்ளைக்காரர்களா? வெள்ளைக்காரனே இங்கு வந்து ஹிந்தி தான் கத்துகிறாங்க.

photo

அதை மாதிரி உங்க பெற்றோர் பையில் இருந்த சில்லறை காசுகளை எடுக்க சொன்னாங்கனு சொல்லியிருந்தீர்கள். அதை எந்த மொழியில் துணை ராணுவ வீரர்கள் கூறியிருந்தாங்க? அதை எப்படி நீங்கள் புரிஞ்சிகிட்டீங்க அதை முதலில் சொல்லுங்கள். வேலை இல்லாதவர்கள் துன்புறுத்தியதா சொல்றீங்க, நீ ரொம்ப வேலையில இருக்கியா? நீ என்னென்ன சிலுமிசம், அட்டகாசம் பண்ணி இருக்க ஊருக்கு தெரியாதா? வேலையில் இருப்பவர்களை மரியாதையா கண்னியமா பேச கத்துக்கோ. அங்கு அவர்கள் டியூட்ய பார்க்குறாங்க அதுதான் அவங்க வேலை.


அதேபோல் அவர்களை ஆங்கிலத்தில் பேச சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்தி தெரியலனனா  இந்தி தெரியாதுன்னு சொல்லுங்கள். ஆங்கிலம் தெரியாதுன்னு சொல்ல நாங்கள் எதற்கும் வெட்கப்படவில்லை தேவையில்லை. ஆங்கிலம் படிக்க வேண்டும் என்கிற அவசியமும் எங்களுக்கு இல்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளும் எங்களுக்கு தெரியும். இந்தியாவில் வாழும் அளவுக்கு எங்களுக்கு மொழி பேச தெரியும். நீ தான் வெளிநாட்டில் சுத்துரவன் அதனால உனக்கு தான் ஆங்கிலம் தெரியனும். வார்த்தையை பார்த்து யூஸ் பண்ணுங்க.’ என அந்த வீடியோவில் அவர் சித்தார்த்தை டோஸ்ட் செய்துள்ளார்.

Share this story