இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘சந்திரமுகி 2’... முக்கிய பிரபலம் கொடுத்த அப்டேட்

dasara

 ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது ‘சந்திரமுகி 2’. முன்னணி இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு உருவாகி வெளியான 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது. 18-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு உருவாகி வரும் இப்படத்தை பி வாசு தான் இயக்கி வருகிறார். நடிகர் ராகவா லாரன்ஸ், சூப்பர் ரஜினியின் ஸ்டைலிலேயே நடித்து வருகிறார்.

dasara

இந்த படத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் இடையேயான மோதலை தான் படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்த படத்தில் சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா நடித்து வருகிறார். இவர்களுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார். 

dasara

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் க்ளைமேக்ஸ் பாடல் ஒன்று சில நாட்களில் படமாக்கப்பட உள்ளது. இதற்காக கலா மாஸ்டருடன் இணைந்து நடிகை கங்கா ரனாவத் ஒத்திகையில் ஈடுபட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவுபெற உள்ளதால் உடனடியாக தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. 

Share this story