1 கோடி நிமிடங்கள்... சாதனை படைத்த 'உடன்பால்' !

udanpaal

'உடன்பால்' திரைப்படம் சமீபத்தில் ஒடிடியில் வெளியான நிலையில் ஒரு கோடி நிமிடங்கள் பார்த்து சாதனை படைத்துள்ளது. 

தமிழ் சினிமாவில் குணசித்திர கதாநாயகனாக இருப்பவர் சார்லி. 80 முதல் இன்றுவரை ஏராளமான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் சார்லி நடித்துள்ள திரைப்படம் ‘உடன்பால்’. இந்த படத்தை கார்த்திக் சீனிவாசன் என்பவர் இயக்கியுள்ளார்

udanpaal

இந்த படத்தில் சார்லியுடன் இணைந்து லிங்கா, காயத்ரி, அபர்னதி, விவேக் பிரசன்னா, தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சக்தி பாலாஜி இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ளார். குடும்பத்தில் நடக்கும் யதார்த்தத்தை விளக்கும் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

udanpaal

இப்படத்தை டி கம்பெனி நிறுவனம் சார்பில் கே.வி.துரை தயாரித்துள்ளது. ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்திற்காக உருவான இப்படம் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் இப்படம் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் இப்படம் 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

Share this story