‘கலகத்தலைவன்’ படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின்... உற்சாகமான உதயநிதி !

Kalagathalaivan

உதயநிதியின் ‘கலகத்தலைவன்’ படத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்த்தார். 

Kalagathalaivan

முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் நடிகர் உதயநிதி. அதனால் அடுத்தடுத்து ஆக்ஷன் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார். அந்த வகையில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத்தலைவன்’. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 18-ஆம் தேதி  திரையரங்கில் வெளியாகவுள்ளது.

Kalagathalaivan

இதையொட்டி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லரும் வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள இப்படத்தை முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் இணைந்து பார்த்தார். படத்தை பார்த்த பிறகு உதயநிதிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார். 

Kalagathalaivan

‘தடம்’ படத்தின் மூலம் பிரபலமான மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் மெட்ராஸ் புகழ் கலையரசனும், பிக்பாஸ் நடிகர் ஆரவ்வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story