கேரளாவில் செண்ட மேளம் அடித்து அசத்திய சியான் விக்ரம்

tn

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.  எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை தற்போது இயக்குனர் மணிரத்தினம் படமாக்கியுள்ளார்.  இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ,விக்ரம் பிரபு , சரத்குமார் ,பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய் ,திரிஷா ,ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

tn

 படத்தின் திரைக்கதையை மணிரத்தினமும் குமரவேலு இணைந்து உருவாக்கியுள்ளனர்.  ஜெயமோகன் வசனத்தில், இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார், இப்படம் வருகிற 30-ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாக உள்ளது , இப்படத்தின் பாடல்கள்  அனைத்தும் லிரிக்கல் வீடியோவாக வெளியான நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக பட குழு நேற்று கேரள மாநிலம்  திருவனந்தபுரம் சென்றனர்.


அங்கு நடைபெற்ற  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் செண்ட மேளம்  குழுவினருடன் இணைந்து மேளம் வாசித்து அசத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொன்னியின் செல்வன் பட குழு நாளை பெங்களூரு செல்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.

Share this story