நாளை திரையரங்குகளில் வெளியாகிறது ‘காபி வித் காதல்’ திரைப்படம்

Coffee with kadhal

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. 

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காபி வித் காதல்’. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது. இந்த திரைப்படம் நாளை (நவம்பர் 4ம் தேதி) திரைக்கு வருகிறது. காபி வித் காதல்' திரைப்படம் முழுக்க முழுக்க மக்கள் புன்சிரிப்புடன் ரசிக்கக் கூடிய வகையில் ஒரு 'பீல் குட்' படமாக இருக்கும் என அத்திரைப்படத்தின் இயக்குநர் சுந்தர் சி கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

Share this story