விஜய்யிடம் ஆசீர்வாதம் வாங்கிய காமெடி நடிகர்... எதற்காக தெரியுமா ?

sathish

தனது புதிய படத்திற்காக நடிகர் சதீஷ் விஜய்யிடம் ஆசீர்வாதம் வாங்கியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.  

முன்னணி நடிகர்களின்‌ திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வந்த சதீஷ், தற்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் 'நாய் சேகர்' படத்திற்கு பிறகு இரண்டாவதாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.  இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி என்பவர் இயக்கயுள்ளார்.

sathish

இந்த படத்தில் சதீஷுக்கு ஜோடியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்ய, விபிஆர் இசையமைக்கவுள்ளார். 

இந்நிலையில் இப்படம் நேற்று பூஜையுடன் தொடங்கிய நிலையில் தனது புதிய படத்திற்காக நடிகர் சதீஷ், விஜய்யிடம் ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். விஜய்யுடனான இந்த சந்திப்பில் இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் கே.விஜய் பாண்டி ஆகியோர் இருந்தனர். 

Share this story