நடிகர் விஜய்க்கு எதிரான புகார்.. அபராதம் விதித்த போலீசார் !

vijay

நடிகர் விஜய் கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதால் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் , தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று பொதுமக்களுக்கான பணியாற்றி வருகின்றனர். 

vijay

விஜய் மக்கள் இயக்கத்தின் கிளை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலையில் கடந்த 20-ஆம் தேதி பனையூரில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சேலம், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். 

vijay

இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக நீலாங்கரை இல்லத்திலிருந்து பனையூர் அலுவலகத்திற்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் விஜய் வந்தார். விஜய் வந்த காரை பின் தொடர்ந்த சில ரசிகர்கள் ஆபத்தை உணராமல் வீடியோ எடுத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில் விஜய் காரில் விதிகளை மீறி கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியது ஏன் என கேள்வி எழுந்தது. இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறிய விஜய் மீது வழக்குப்பதிவு செய்து ரூபாய் 500 அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. 

Share this story