தொடர் காய்ச்சல், இருமல்.. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலஹாசன் !

KAMAL

தொடர் பணிகளில் இருந்த நடிகர் கமலுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்திய சினிமாவில் மிகப்பெரிய முகமாக இருப்பவர் நடிகர் கமலஹாசன். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படம் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில நடித்து வருகிறார். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

KAMAL

இதுதவிர மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளையும் செய்து வருகிறார். இப்படி தொடர்ந்து பல கோணங்களில் கமலஹாசன் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் ஐதராபாத் சென்று இயக்குனர் கே விஸ்வநாத் சந்தித்த நிலையில் அங்கு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். 

நேற்று சென்னை திரும்பிய நிலையில் அவருக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில்இன்று வீடு திரும்பியுள்ளார். இரண்டு நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையில் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் தனது இயல்பான பணிகளுக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. 

Share this story