நடிகர் சித்தார்த் பதிவால் வெடிக்கும் சர்ச்சை – இந்தி தெரியாது போடா……

photo

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகரான சித்தார்த் தனது சமூகவலைதள பக்கத்தில் போட்டுள்ள பதிவு இணையத்தில்ம் சர்ச்சையை கிளப்பி பேசுபொருளாக மாறியுள்ளது. 

photo

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சித்தார்த் பாய்ஸ், காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், உதயம் என்.ஹெச்.4 போன்ற படங்களில் நடித்துள்ளார்.  தற்போது இவர் கமல் ஷங்கர் கூட்டணியில் ‘இந்தியன்2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கொடைகானலுக்கு சுற்றுலா செல்ல பெற்றோருடன் மதுரை விமான நிலையம் சென்ற போது  அவர் சந்தித்த சங்கடத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

photo

அதில் அவர் கூறியதாவது, “சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மதுரை விமான நிலையத்தில் எங்களை ஹிந்தியில் பேச வற்புறுத்தினர். ஆளே இல்லாத மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம்வயதில் முதிர்ந்த என்னுடைய பெற்றோர்களின் பையிலிருந்த நாணயங்களை அகற்றுமாறு அவர்கள் வற்புறுத்தினார்கள்நாங்கள் அவர்களை ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டுக்கொண்டோம், இருப்பினும் அவர்கள் தொடர்ந்து ஹிந்தியிலேயே தான் பேசிக்கொண்டிருந்தனர். நாங்கள் மீண்டும் மீண்டும் கேட்டதற்கு இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்று கூறினார்கள், வேலையில்லாதவர்கள் தான் அதிகாரம் காட்டுகின்றனர்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

photo

சித்தார்த்தின் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. பலருமே சித்தார்த்திற்கு ஆதரவு கரங்களை நீட்டி வருகின்றனர்.

Share this story