முழுக்க முழுக்க ஆக்ஷனில் உருவாகியுள்ள 'கஸ்டடி'... மோஷன் வீடியோ வெளியீடு !

custody

நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ படத்தின் மோஷன் வீடியோ வெளியாகியுள்ளது. 

சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கஸ்டடி'. தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். 

custody

இவர்களுடன் அரவிந்த் சாமி,  பிரேம்ஜி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். 

custody

இந்தப் படம் வரும் மே மாதம் 12-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தயாரிப்பு பணியில் உள்ள இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள இந்த போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

 ‌

 

 

 

Share this story