கவர்ச்சியதாண்டி என்ன தெரியும் உனக்கு? நெட்டிசனின் கேள்விக்கு வீடியோ போட்டு மிரளவைத்த தர்ஷாகுப்தா.

photo

தர்ஷா குப்தா சமூகவலைதளத்தில் முகவும் ஆக்டிவ் என நாம் அறிந்த ஒன்றுதான். அந்த வகையில் அவரது ஓவர் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் சிலர் ஹார்ட்ஸ்களை வாரி வழங்கி வரும் நிலையில், நெட்டிசங்கள் சிலரோ, உனக்கு கவர்ச்சிய தவிர வேறு எனன தெரியும்? கவர்ச்சியை தாண்டி உழைப்பை காட்டுங்கள் என கேட்டதற்கு தர்ஷா குப்தா வீடியோ வெளியிட்டு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

photo

மோகன் ஜி இயக்கியிருந்த ருத்ரதாண்டவம் படத்தில் ரிஷிக்கு ஜோடியாக வெள்ளிதிரையில் அறிமுகமானார் தர்ஷா. முதல் படத்திலேயே இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. இதையடுத்து அவர் நடித்த படம் மை கோஸ்ட். இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. சன்னி லியோன் கதையின் நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் தர்ஷா குப்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

photo

இந்த நிலையில் தன்னை கிண்ட்லடித்த நெட்டிசங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மை கோஸ்ட் படத்தில் தான் நடித்த ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தர்ஷா. “கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும் நடிப்புத் திறனையும் காட்டுங்கள் என்று கூறிய அனைவருக்கும் இந்த ஓஎம்ஜி (OMG) படத்தின், BTS வீடியோவை சமர்ப்பிக்கிறேன்” என அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

Share this story