ஹாரர் த்ரில்லரில் வருகிறது ‘டிமான்டி காலனி 2’... மிரட்டலான மோஷன் போஸ்டர் வெளியீடு !

Demonte Colony 2

அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிமான்டி காலனி’ படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த 2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான திரைப்படம் ‘டிமான்டி காலனி’. இந்த படத்தில் அருள்நிதியுடன் இணைந்து ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டோர் நடித்திருந்தார். ஹாரர் த்ரில்லரில் உருவாகி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

arulnithi

இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில் இதன் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைன், டிசேரிங் டோர்ஜோ, அருண் பாண்டியன், முத்துகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனா காலிட், விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

ஞானமுத்து பட்டரை மற்றும் வெயிட் நைட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஒசூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் மிரட்டலான மோஷன் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

Share this story