தனுஷ் எழுதிய காதல் மெலோடி பாடல்... பட்டையை கிளப்பும் 'வா வாத்தி' !

vaathi

தனுஷ் எழுதிய 'வா வாத்தி' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

‘நானே வருவேன்’ படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’, சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழில் வாத்தியாகவும், தெலுங்கில் சார் என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 vaathi

இந்த படத்தை 'தோழி பிரேமா', மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தயாரிப்பு பணிகள் நிறைவுபெறாததால் சொன்னபடி வெளியாகாது என கூறப்படுகிறது. 

vaathi

ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் முதல் பாடலான 'வா வாத்தி' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தனுஷ் எழுதிய இந்த காதல் மெலோடி பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story