திட்டமிட்டபடி வெளியாகும் தனுஷின் ‘வாத்தி’.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

vaathi

 தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ ரிலீஸ் தேதி மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி‘. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை 'தோழி பிரேமா', 'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

vaathi

இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் வெளியாகாத நிலையில் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி என புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தேதியிலும் இப்படம் வெளியாகாது என்றும், ஏப்ரல் அல்லது மே மாதம் தான் வெளியாகும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

 இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் 2வது பாடலான ‘நாடோடி மன்னன்’ பாடல் வரும்ஜனவரி 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் பிப்ரவரி 17-ஆம் ‘வாத்தி’ திரைப்படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Share this story