மீண்டும் துளிர்ந்த நட்பு... கவனம்பெறும் தனுஷ்- அனிரூத் புகைப்படம் !
தனுஷ் மற்றும் அனிரூத் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் கூட்டணியாக இருந்து வருபவர்கள் தனுஷ் மற்றும் அனிரூத். ரசிகர்களால் டிஎன்ஏ என்று அன்போடு அழைக்கப்படும் இவர்களது படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. '3' படத்தின் மூலம் இந்த கூட்டணி ரசிகர்களுக்கு அறிமுகமானது. இவர்களது கூட்டணியில் வெளியான முதல் பாடலான 'Why this கொலவெறி' அசுர வெற்றி பெற்றார்.
இதனால் அடுத்தடுத்த பாடல்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதை பூர்த்தி செய்யும் விதமாக வேலையில்லாத பட்டதாரி, மாரி, எதிர்நீச்சல் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான 'தங்கமகன்' படத்திற்குதான் கடைசியாக அனிரூத் இசையமைத்தார். இந்த படத்திற்கு பிறகு சில மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 7 வருடங்களாக இந்த கூட்டணி இணையாமல் இருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு 'திருச்சிற்றம்பலம்' படம் மூலம் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனுஷும், அனிரூத்தும் மீண்டும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் மற்றும் அனிரூத் கூட்டணியில் மீண்டும் சூப்பர் பாடல்களை பார்க்கலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.