காடுகள் குறித்து பேசும் ஜிவி பிரகாஷின் ‘கள்வன்’.. மோஷன் போஸ்டரை வெளியிட்ட தனுஷ் !

kalvan

 ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கள்வன்’ படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். 

முதல்முறையாக பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்த படத்தை மரகத நாணயம், ராட்சஸன், ஓம் மை கடவுளே, பேச்சிலர் ஆகிய படங்களை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. 

kalvan

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க காடுகள் குறித்து இந்த படத்தில் பேசப்பட்டுள்ளது. அதனால் சத்யமங்கலம் புலிகள் காப்பக பகுதியான கடம்பூர் மலை கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 

தற்போது தயாரிப்பு பணிகளில் உள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


 

Share this story