‘தாராள பிரபு’ பட நடிகருக்கு திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள் !

harish kalyan

 இளம் நடிகரான ஹரிஷ் கல்யாணுக்கு நாளை திருமணம் நடைபெறவுள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். சாக்லேட் பாய் நடிகராக இருக்கும் அவர், ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு சட்டப்படி குற்றம், அரிது அரிது, பொறியாளன், சந்த மாமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

harish kalyan

ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் போதிய வெற்றியை பெறாத நிலையில் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு அவர் நடித்த தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து டீசல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். 

harish kalyan

இதற்கிடையே நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் - நர்மதா திருமணம் நாளை கோலாகலமாய் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஹரிஷ் கல்யாணுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

 

 

Share this story