‘துணிவு’ படத்தை பார்த்து மிரண்டு போய் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய தில் ராஜு- இது தலதளபதி பொங்கல்.

photo

வாரிசு படத்தின் தயாரிப்பாளரான  தில் ராஜு, அஜித்தின் துணிவு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய செய்தி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

photo

அஜித் எச் வினோத் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் ‘துணிவு’ வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது, இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை  உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தமிழை கடந்து இந்த படம் தெலுங்கில் தெகிம்பு என்கினற பெயரில்  டப் செய்யப்பட்டு   வெளியாக உள்ளது.

photo

இந்த நிலையில் துனிவு படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் வெளியீட்டு உரிமையை ராதாகிருஷ்ணா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஐவிஒய் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளதாக நேற்றைய தினம் அறிவிப்பு வெளியானது. இதில் பலருமே ஆச்சரியபடும் விஷயம் என்னவென்றால் மாநிலங்களில் முக்கிய பகுதியாக பார்க்கப்படும் நிசாம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இரு இடங்களிலும் துணிவு பட வெளியீட்டு உரிமையை ‘வாரிசு’ படத்தயாரிப்பாளரான தில் ராஜுதான் கைப்பற்றியுள்ளார். இந்த ஒருதகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை எற்படுத்தியுள்ளது.

Share this story