மடிப்பிச்சை ஏந்திய ‘இயக்குநர் பார்த்திபன்’ – வைரலாகும் வீடியோ.

photo

சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில், பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் ஒவ்வொரு அரங்கிற்கும் சென்று சிறைகைதிகளுக்காக புத்தகம் கேட்டு  மடிப்பிச்சை கேட்ட  சம்பவம் அறங்கேறியுள்ளது.

photo

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்து வரும் 46வது சர்வதேச புத்தக கண்காட்சியில் இந்த ஆண்டு பிரத்தியேகமாக சிறைவாசிகளுக்காக தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் வாசகர்களிடமிருந்து புத்தகங்கள் தானமாக பெறப்படுகிறது.

photo

இந்தநிலையில் இந்த புத்தகக் கண்காட்சியை இன்று பார்வையிட்ட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சிறைவாசிகளுக்காக புத்தகம் வேண்டி ஒவ்வொரு அரங்காக சென்று மடிபிச்சை கேட்டு புத்தகங்களை தானமாக பெற்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்று, அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

photo

Share this story