'நானே வருவேன்' - விமர்சனம்!

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெளிவந்த 'ஆளவந்தான்' படத்தின் இன்னொரு வெர்சன்தான் செல்வராகவன் டைரக்சன்ல வந்திருக்கும் 'நானே வருவேன்' படமும். ஒரு தனுஷ் வாண்டா இருக்கும் போதே வாண்டேடா போய் கொல பண்ற அளவுக்கு சைக்கோ.இன்னொரு தனுஷ், இதுக்கு ஆப்போஸிட் கேரக்டர்.சின்ன வயசுல ரெண்டு பேரும் வேற வேற வாழ்க்கை சூழல்ல வளர்றாங்க. அதுக்கப்புறம் இருவத்தியஞ்சு வருசத்துக்கு அப்புறம் மெயின் ஸ்டோரி ஆரம்பிக்குது.
மனைவி,பன்னெண்டு வயசு மகள் என நிம்மதியாக வாழ்த்திகிட்டிருக்கிற தனுஷ் வாழ்க்கையில்,ஆவி ஒண்ணு வந்து ஆட்டம் கான வைக்குது.மகளை காப்பாத்தணும்னா ஒரு கொல பண்ணனும்னு டிமாண்ட் வைக்குது அந்த ஆவி.கொல செய்ய வேண்டிய ஆள் யார்றான்னு பார்த்தால்… சைக்கோ தனுஷ்.மகளைக் காப்பாத்துறதுக்காக எத்தன கொல வேணாலும் பண்ணுவேன் என்று கிளம்பிப்போகிறார் அப்பாவி தனுஷ். அதுக்கப்புறம் நடக்கிறதெல்லாம் எதிர்பாராத ட்விஸ்ட்!
ஃபர்ஸ்ட் ஹாஃப் கோஸ்ட் த்ரில்லர் ரகம்.செகண்ட் ஹாஃப்,சைக்கோ க்ரைம் த்ரில்லர் வகை.அப்பாவி : அடங்காதவன்னு ரெண்டு கேரக்டருக்கும் செம வெரைட்டி காட்டியிருக்கார் தனுஷ்.ஹீரோவைவிட வில்லனுக்கு வெயிட் கொடுக்கிற இப்போதைய ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி வில்லன் தனுஷ் மிரட்டியிருக்கார். செல்வராகவன்,தனுஷ்,யுவன் சங்கர் ராஜா கூட்டணின்னாலே மியூஸிக் ஸ்பெஷலாதான் இருக்கும்.இதிலும் அதை நிரூபித்திருக்கிறார் யுவன்.
வில்லன் தனுஷ்க்கு அப்பப்போ 'பளிங்கினால் ஒரு மாளிகை' மாதிரி சில கிளாஸிக் ஸாங்கை பேக்ரவுண்ட் ஸ்கோர்ராக பயன்படுத்திருப்பது அலப்பறை.தனுஷ் ஆடுகிற ஆட்டம் அப்படியே எய்ட்டிஸ் ரஜினியின் ரிவ்லெக்சன்.
படத்தில் தனுஷ்க்கு அடுத்து ஸ்கோர் பண்ற ஆட்கள் யாருன்னு பார்த்தால், சின்ன வயசு தனுஷாக நடித்த இரட்டையர்கள்,அப்புறம் சைக்கோ தனுஷின் மகன்களாக நடித்த இரட்டையர்கள், அப்பாவி தனுஷின் மகளாக நடித்த குழந்தை.அஞ்சு பேரும் அட்டகாசம் பண்ணியிருக்கிறார்கள்.இந்த கோஸ்ட் அண்ட் சைக்கோ க்ரைம் த்ரில்லரை என்ஜாய் பண்ணனும்னா…கொஞ்சம் பொறுமையா காத்திருக்கணும்.
V.K. சுந்தர்