அனுமதியின்றி 'ரஜினி'யின் படங்கள், குரல் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது- பொது அறிவிப்பு வெளியீடு.

photo

ஸ்டைல் என்றால் சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் என்றால், ஸ்டைல் என்று சொல்லும் அளவிற்கு இவரது ஒவ்வொரு படமும் பக்கா மாஸ்ஸாக தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். உலகம் முழுவதும் ஒரு இந்திய நடிக்கருக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த மட்டும்தான்.  இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த சார்பாக பொது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

photo

அதாவது, ன்னுடைய  பெயர், போட்டோ, குரல், புகழ் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றி பயன்படுத்த கூடாது, என்றும் மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று இன்று அறிவித்துள்ளார். இதனை ரஜினிகாந்த் தரப்பிலிருந்து வழக்கறிஞர் இளம்பாரதி பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

photo

அதாவது, பல உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் குரல், போட்டோ, புகழ் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. இதனால் ரஜினிகாந்தின் அந்தஸ்திற்கு பங்கம் ஏற்படும் ஆபத்து உள்ளதால், ரஜிகாந்தின் அனுமதி இன்றி குரல், புகைப்படம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பட்சத்தில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக வரும் நாட்களில் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this story