மதத்தை வைத்து ஏமாற்றப்படும் அப்பாவி மக்கள்... பகத் பாசிலின் ‘நிலை மறந்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

NilaiMarandhavan

பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிலை மறந்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பலமொழிகளில் நடித்து வருபவர் பகத் பசில். அவர் நடிப்பில் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிலை மறந்தவன்’. மலையாளத்தில் ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய படங்களை இயக்கிய அன்வர் ரஷீத் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

NilaiMarandhavan t

இந்த படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கௌதம் மேனன், திலீஷ் போத்தன், செம்பான் வினோத், விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜான்ஸன் விஜயன் மற்றும் சுஷின் ஷியாம் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர். இந்த படத்தை அன்வர் ரஷித் எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

NilaiMarandhavan t

மதத்தின் பெயரால் பொதுமக்களை எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் டிரெய்லர் வெளியாகி ஏற்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story