ஐஸ்வர்யா ராஜேஷின் பாலிவுட் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. புதிய அறிவிப்பு !

manik

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'மாணிக்' படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் கலக்கி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 'காக்காமுட்டை' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர், தற்போது நல்ல கதையம்சத்துடன் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'டிரைவர் ஜமுனா' விரைவில் வெளியாக உள்ளது. 

manik

ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு 'டாடி' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இரண்டாவது படம் குறித்து நேற்று அறிவிப்பு வெளியானது. த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தை சாம்ராஜ் சக்கரவர்த்தி என்பவர் இயக்கவுள்ளார்.

manik

வித்தியாசமான கதைக்களத்தில் ‘மாணிக்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிறது. இந்த படத்தில் சம்யுக்தா சண்முகநாதன், சாய் ஜனனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story