‘இந்தியன் 2’-ல் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை.. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் !

indian 2

 கமலின் ‘இந்தியன் 2’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை இணைந்துள்ளார். 

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது படத்தை ஒட்டுமொத்தமாக இந்த மாத இறுதிக்குள் முடிக்க பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. அதனால் மீதமுள்ள படப்பணிகள் விரைவில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

indian 2 

கடந்த மாத தொடக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. திருப்பதியில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில் 1920-ஆம் ஆண்டுகளில் இருப்பது போல் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. அதாவது கமல் நடிக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகள் எடுக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பு கடந்த மாதமே முடிக்கப்பட்டது. 

indian 2

இந்நிலையில் சரியாக ஒரு மாதம் கழித்து இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் கமல் நடிக்கும் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் அப்பாவான யோகராஜ் சிங் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

Share this story