’வீச்சருவா வீசி வந்தோம்’ போர்குடி படத்தின் முதல் பாடல் வெளியீடு

Porgudi

போர்குடி படத்தின்’வீச்சருவா வீசி வந்தோம்’ என்ற முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

ஆறுமுகம் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் போர்குடி. பீச்சாங்கை, என்னங்க சார் உங்க சட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆர்.எஸ்.கார்த்திக் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இவருக்கு ஜோடியாக நடிகை ஆராத்யா நடித்துள்ளார். சங்கர் தாஸ், அருண்மொழி தேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் எனும் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர்.தியாகு, ரோல்ஸ்டன் கருப்பசாமி, சரவணன் குப்புசாமி மற்றும் எஸ்.எஸ்.நந்தகுமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு செந்தமிழ் இசையமைத்திருக்கிறார். 

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'வீச்சருவா வீசி வந்தோம்..' எனத் தொடங்கும் பாடலுக்கான வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

Share this story