‘வாழ்க்கை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறது’ - ஜிவி பிரகாஷின் ‘கள்வன்’ டீசர் வெளியீடு !

kalvan

 ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கள்வன்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

முழுக்க காடுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள கதைக்களம் தான் ‘கள்வன்’. இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

kalvan

இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை மரகத நாணயம், ராட்சஸன், ஓம் மை கடவுளே, பேச்சிலர் ஆகிய படங்களை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சத்யமங்கலம் புலிகள் காப்பக பகுதியான கடம்பூர் மலை கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது.  

kalvan

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் மிரட்டலாக நடித்துள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வரும் சம்மரில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story