கவிதாலயா தயாரிப்பில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்.. பூஜையுடன் தொடங்கிய புதிய படம் !

gv prakash

 ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா பூஜை இன்று நடைபெற்றது. 

gv prakash

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்த கவிதாலயா, இயக்குனர் பாலசந்தரின் மறைவுக்கு பிறகு திரைப்படங்களை தயாரிக்காமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது புதிய படங்களை தயாரிப்பதில் மிகுந்த காட்டி வருகிறது. அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து கவிதாலயா தயாரிக்கவுள்ளது. 

gv prakash

இந்த படத்தை இது நம்ம ஆளு, நேர்கொண்ட பார்வை, கபாலி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் நடித்த நடிகர் உதய் மகேஷ் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே நாளை, சக்ர வியூகம் ஆகிய படங்களை இயக்கியவர். பிசியான நடிகராக இருந்து வந்த இவர், தற்போது மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளார். 

gv prakash

இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இவர்களுடன் டேனியல் போப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹேசம் அப்துல் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் தொடங்கவிழா பூஜையுடன் இன்று துவங்கியது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.     

gv prakash

Share this story