மெலோடி பாடலாக உருவாகியுள்ள ‘வாத்தி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள்.. ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் !

vaathi

 தனுஷின் ‘வாத்தி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் குறித்து முக்கிய அப்டேட்டை ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். 

'மிஸ்டர் மஜ்னு' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  

vaathi

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 2-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

vaathi

ஜிவி பிரகாஷ் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. இதில் தனுஷ் எழுதிய ‘வாத்தி’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வரும் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகிறது. மெலோடி பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். இந்நிலையில் இப்பாடல் நாளை மறுநாள் வெளியாவதையொட்டி ஸ்பெஷல் வீடியோ ஒன்றை ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க தனுஷ் அந்த பாடலை பாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவால் பாடலுக்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. 

Share this story