ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் ‘கள்வன்’... ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் பிரபல நடிகர் !

kalvan

 ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் ‘கள்வன்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கள்வன்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்து வருகிறார். 

ajith 62

பேச்சிலர் படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் காட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் சத்யமங்கலம் புலிகள் காப்பக பகுதியான கடம்பூர் மலை கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 

ajith 62

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரபல நடிகர் தனுஷ் வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story