காந்தாரா படத்தின் 'வராஹ ரூபம்' பாடல் திருடப்படவில்லை- இசையமைப்பாளர் விளக்கம்

Kanthara

காந்தாரா படத்தில் வரும் 'வராஹ ரூபம்' பாடல் ’நவரசம்’ ஆல்பமில் இருந்து  திருடப்படவில்லை என அந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். 

கன்னடத்தில் சமீபத்தில் வெளியான 'காந்தாரா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பண்ணையாருக்கும், பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சனையே இந்த படத்தின் கதைக்களம். நில அரசியலை அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பழங்குடியின மக்கள் என முக்கோணத்தை இணைந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் தமிழகத்தை சேர்ந்த கிஷோர், கதாநாயகியாக சப்தமி கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்த படம் 200 கோடிக்கு மேலீ வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இந்த திரைப்படத்தை பாராட்டி இருந்தார். 

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் 'வராஹ ரூபம்' பாடல்,  தங்களின் 'நவரசம்' ஆல்பமில் இருந்து திருடப்பட்டுள்ளதாக தைக்குடம் இசைக்குழுவினரின் சமூக வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டியது. மேலும் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டிற்கு காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில் "இரண்டு பாடல்களும் ஒரே ராகத்தில் இசையமைக்கப்பட்டுள்ளதால் ஒன்று போல் தோன்றலாம் என விளக்கம் தெரிவித்துள்ளார்.

Share this story