ஜெஸ்டின் பிரபாகர் இசையில் ‘ஜல் சக்கா’ பாடல்.. விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !

Gatta Kusthi

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. 

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

Gatta Kusthi

இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர்களுடன்  காளி வெங்கட்,  முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் குஸ்தி வீரராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். 

Gatta Kusthi

இந்த படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘ஜல் சக்கா’ வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலை பென்னி தயால் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story