கௌதம் கார்த்திக் - சரத்குமார் இணைந்து நடிக்கும் ‘கிரிமினல்’... புதிய படத்தின் அட்டகாசமான அறிவிப்பு !

Criminal

 கௌதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் கார்த்தியின் மகனாக கௌதம் கார்த்திக், தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருகிறார். மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இவர், என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

Criminal

இதையடுத்து பத்து தல, யுத்த சத்தம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கிரிமினல்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து சரத்குமார் நடிக்கவுள்ளார். 

இந்த படத்தை தட்சிணாமூர்த்தி ராமர் என்பவர் இயக்கவுள்ளார். இசையமைப்பாளராக சி.எஸ்.சாமும், ஒளிப்பதிவாளராக பிரசன்னா எஸ் குமாரும் பணியாற்றவுள்ளனர். மதுரையில் நடக்கும் ஒரு கொலையின் பின்னணியை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கௌதம் கார்த்தி குற்றவாளியாகவும், சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கவுள்ளனர். 

பாரா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்டர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story