கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம்.. பிரம்மாண்டமாக நடைபெறும் ஏற்பாடுகள் !

gautham karthik

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோரது திருமண ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருப்பவர் கௌதம் கார்த்திக். சினிமா வாரிசான இவர், பிரபல நடிகர் கார்த்திக் மகனாவார். மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

gautham karthik

இளமை ததும்பும் அழகுடன் இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது சிம்புவின் ‘பத்து தல’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், மலையாள நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ‘தேவராட்டம்’ படத்தின் மூலம் இந்த காதல் மலர்ந்து பின்னர் உறுதி செய்யப்பட்டது.  

இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமண ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 28-ஆம் தேதி சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துக் கொள்ள உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடைபெறும் வரவேற்புக்கு திரைப்பிரபலங்களை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

Share this story