'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது... கமல்ஹாசன், இளையராஜா வாழ்த்து !

nattu nattu

'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளதற்கு கமல், இளையராஜா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.‌

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த படம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த இந்த வசூல் சாதனை படைத்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி ரசிகர்களை கவர்ந்ததது. 

nattu nattu

இந்த படத்தை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இதற்கு காரணம் எம்.எம்.கீரவாணி இசையில் இப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை தட்டி சென்றுள்ளது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இந்த விருது  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் ஐந்து பாடல்கள் இடம்பெற்ற நிலையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. 

 nattu nattu

இதை ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து விருது வாங்கிய படக்குழுவினருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. @ssrajamouli இயக்கிய #RRR படத்தின் #NaatuNaatu பாடலுக்காக #GoldenGlobes விருது வென்று தந்திருக்கிறார் @mmkeeravaani முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 


இதேபோன்று இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இசையமைப்பாளர் கீரவாணி, ராஜமெளலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். 

 


 

Share this story