வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய ஹன்சிகா.. வைரலாகும் புகைப்படங்கள் !

hansika

தனது வருங்கால கணவர் யார் என்பதை நடிகை ஹன்சிகா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ஹன்சிகா. சின்ன குஷ்பூ என்று அழைக்கப்படும் ஹன்சிகா, தமிழில் ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அவர், ‘மஹா’ படத்தின் மூலம் தனது 50வது படத்தை நிறைவுசெய்தார். 

hansika

இதற்கிடையே ஹன்சிகாவுக்கு திருமணம் என்ற செய்தி நீண்ட நாளாக உலா வருகிறது. தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கதுரியாவை கடந்த சில ஆண்டுகளாக ஹன்சிகா காதலித்து வருகிறார். இந்நிலையில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை முதல்முறையாக ஹன்சிகா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிகிறது. 

hansika

ஹன்சிகா - சோஹைல் கதுரியா திருமணம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்பூர் அரண்மனையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.    

 hansika

Share this story